Jobs: TNPSC மூலம் மின்வாரியத்தில் 1,850 உதவியாளர்கள் தேர்வு

Published On:

| By Mathi

Jobs TNEB TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலமாக 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய மின்வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 400 உதவி பொறி​யாளர்​கள், 1850 கள உதவி​யாளர்​கள் TNPSC மூல​மாக தேர்வு செய்யப்பட உள்ளனர். TNPSC-ன் ஒருங்கிணைந்த தொழில் ​நுட்ப சேவை​கள் தேர்​வு​கள் மூல​மாக இப் பணி​யிடங்​கள் நிரப்பப்படும்.

2023-ம் ஆண்டு முதல் மின்சார வாரியப் பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்​கள் விரை​வில் பணி​யில் சேர உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share