14+1 இடங்கள் தருபவர்களுடன் மட்டும்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கப்படும், இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 7) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ”இன்று நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எல்லா மாவட்டச் செயலாளர்களும் பேசினார்கள். அவர்கள் ஒட்டுமொத்த பேரும் தனியாகக் களம் காண்போம் என்று கருத்து தெரிவித்தனர்.
விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கப் போகும் முதல் தேர்தல் இது. அதனால் எங்களுக்கு அனுதாப ஓட்டு வரும் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
விஜயகாந்த் வழிப்படி தனித்து களம் காண்போம் என்று மா.செ.க்கள் சொன்னார்கள். இருந்தாலும் 4 வழி உள்ளது. ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி அல்லது பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது.
இதில் எந்த கட்சி 14 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை சீட்டும் தருகிறதோ, அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்பதுதான் இறுதி முடிவு.
இனிதான் நாங்கள் குழு அமைத்து, தேர்தல் பணிகளை தொடங்கவுள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை இன்றுதான் யோசிக்க போகிறோம்.
இதுவரைக்கும் தேமுதிக கூட்டணி பற்றி வந்த செய்திகள் அனைத்தும் யூகங்கள்தான்.
கொள்கை, சித்தாந்தங்கள் பற்றி தேமுதிகவிடம் கேட்க வேண்டாம். விஜயகாந்த் அளவுக்கு இதுவரை எந்த கட்சிகளும் தங்களது கொள்கைகளை அறிவிக்கவில்லை” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஐடி பங்குகள் வீழ்ச்சி : சரிவில் முடிந்த பங்குச்சந்தை வர்த்தகம்!
வெற்றி துரைசாமிக்கு என்னாச்சு? தர்மம் தலைகாக்க வேண்டும்- இதயத்தை உலுக்கும் இமாச்சல் விபத்து!
