3 பைக் – 14 பேர் சாகசம்: காவல்துறை அதிரடி!

Published On:

| By Monisha

14 youths ride 3 bikes

3 இருசக்கர வாகனங்களில் 14 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் 3 இருசக்கர வாகனத்தில் 14 இளைஞர்கள் பயணம் செய்யும் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சாலையில் செல்கின்றது. அதில் ஒரு இருசக்கர வாகனத்தில் 6 பேரும், மற்ற இரண்டு வாகனங்களில் தலா 4 பேரும் பயணம் செய்கின்றனர்.

இந்த சம்பவம் பரேலியின் தியோரானியா பகுதியில் நடந்துள்ளது. இந்த வீடியோ பரவியதை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இளைஞர்களின் இந்த செயல் குறித்து பலேலி காவல்துறை அதிகாரி அகிலேஷ் குமார் சௌராசியா, “தகவல் கிடைத்ததும், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இருசக்கர வாகனங்கள் இருவர் மட்டும் பயணிப்பதற்குத் தான் என்றும், இதனை மீறி இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி சாகசம் என்ற பெயரில் இளைஞர்கள் இவ்வாறு ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வாழ்க்கை விலை மதிப்பு மிக்கது என்றும் இந்த வீடியோவை பார்க்கும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோனிஷா

ஆளுநருக்கு எதிராக அஜித்

மெஜாரிட்டி இல்லாத ஓபிஎஸ்: அதிமுக வாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share