சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது!

Published On:

| By Minnambalam

fire accident 3 arrested by police

சிவகாசியில் நேற்று (அக்டோபர் 17) ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அவ்வப்போது விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ரெங்கபாளையம் மற்றும் கீச்சநாயகன்பட்டி ஆகிய இரு இடங்களில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கடைக்குள் வைத்திருந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்ததால் தொழிலாளர்களால் கடையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்த கோர விபத்தில் ரெங்கபாளையத்தில் 13 பேரும் கீச்சநாயக்கன்பட்டியில் ஒருவரும் என மொத்தம் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ரெங்கபாளையம் பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார். போர்மேன் கனகராஜ் ஆகிய 3 பேரை எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

’தளபதி’ விஜயின் லியோவை நள்ளிரவில் பாராட்டிய உதயநிதி: பின்னணி என்ன?

ஒரே நாளில் ரூ.360 உயர்வு: தங்க விலை நிலவரம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share