“ஒரு மாதத்தில் 133 கொலைகள்”: சீமான் காட்டம்!

Published On:

| By indhu

கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 7) தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சிபிஐ விசாரணை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மத்திய புலனாய்வு அதிகாரிகள் இதை சரியாக செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. மாநில காவல்துறை, உளவுத்துறை, சிபிசிஐடி என இவ்வளவு துறைகள் இருக்கும்போது எதற்காக சிபிஐ விசாரணைக்கு செல்ல வேண்டும்.

தற்போது காவல்நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சரணடைந்தவர்கள் அனைவரும் உண்மையான குற்றவாளிகளா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அவர்களை யாரும் கைது செய்யவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?

தமிழகம் அமைதியாக இருப்பதாக கூறுகிறார்கள். சுடுகாடு எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும். அமைதி பூங்காவாக இருக்கவேண்டும் என்றால், மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை கொன்றுவிட்டால் தமிழகம் அமைதி பூங்காவாக மாறிவிடும்.

2,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங். சாதிகள் இல்லாமல் தமிழ் சமூகமாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் முன் வைத்த தத்துவம் எப்போதும் மரணித்து போகாது” என சீமான் தெரிவித்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“பழிவாங்கும் நோக்கத்தோடு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு”: எடப்பாடி தாக்கு!

டைட்டானிக், அவதார் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share