13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அங்கித் திவாரி, சிருஷ்டி சிங்கிற்கு பதவி உயர்வு!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (பிப்ரவரி 6) பிறப்பித்துள்ள உத்தரவில்,  

ADVERTISEMENT

கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் திவாரி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த  சிருஷ்டி சிங் காவல் கண்காணிப்பாளராக  பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய ஐஜி/உறுப்பினர் செயலர் ராஜேஸ்வரி,  பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐஜியாகவும் 

பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி கயல்விழி,  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐஜி/உறுப்பினர் செயலராகவும்

ADVERTISEMENT

காத்திருப்போர் பட்டியல்  இருந்த ரம்யா பாரதி, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும், 

வேலூர் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், சென்னை, தெற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத் துறை காவல் கண்காணிப்பாளராகவும், 

திருச்சி தெற்கு துணை ஆணையர் ஈஸ்வரன்  ஆவடி மாநகர போக்குவரத்து பிரிவு  துணை ஆணையராகவும், 

சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன்,  அண்ணா நகர் துணை ஆணையராகவும், 

கோயம்பேடு துணை ஆணையர் சுஜித் குமார்,  சென்னை மாநகரம் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையராகவும்

சென்னை மாநகரம் போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையர்  சுகாசினி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய காவல் கண்காணிப்பாளராகவும், 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி சென்னை காவல் பயிற்சி கல்லூரி முதல்வராகவும்

சேலம் மாநகர காவல் துணை ஆணையர் சிவராமன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் 

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் உதயகுமார் கோயம்பேடு துணை ஆணையராகவும்  மாற்றப்பட்டுள்ளனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share