+2 ரிசல்ட் – சாதனை படைத்த மாணவிகள் : உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு தேர்ச்சி? – முழு விவரம்!

Published On:

| By Kavi

12th public exam result

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  முடிவில் 91.94 %  அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12th public exam result

கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. 

இதில் 3,73,178 மாணவர்கள்,  4,19,316 மாணவிகள் என 7,92,494 பேர் தேர்வு எழுதினர். 10,049 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 

இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று (மே 6) வெளியானது. 

இதில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதாவது 4,05,472 (96.70 %) மாணவிகளும், 3,47,670 (93.16 %)  மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாணவர்களை விட மாணவிகள் 3.54 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் 7,60,606 மாணவர்கள் தேர்வு எழுதி 7,19,196 பேர், அதாவது  94.56 % பேர் தேர்ச்சி பெற்றனர். 12th public exam result

அந்தவகையில் 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம்  0.47%  கூடுதலாக உள்ளது. 

7,513 மேல்நிலை பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 2,638 மேல் நிலை பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 436 அரசு மேல்நிலை பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

அந்தவகையில் 91.94 % அரசு பள்ளிகள்,  95.71 % அரசு உதவி பெறும் பள்ளிகள்,  98.88 % தனியார் சுயநிதி பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. 

பள்ளி வகைப்பாட்டை பொறுத்தவரை 95.30 %  இருபாலர் பள்ளிகள், 96.50 % பெண்கள் பள்ளிகள்,  90.14% ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. 

ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்  6.36% கூடுதலாக உள்ளது. 

பாட வாரியாக 12th public exam result

தமிழில் 135 பேர் 100க்கு 100 மதிப்பெண் வாங்கியுள்ளனர். தமிழ் பாடத்தில் 99.15 % பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 

அதுபோன்று இயற்பியலில் (தேர்ச்சி சதவிகிதம் – 99.22 %  ) 1,125 பேர் ,  வேதியலில்  (98.99 % ) 3,181 பேர்,  உயிரியலில் (99.15 %) 827,  கணிதத்தில் (99.16 %) 3,022  பேர்,  தாவரவியலில் (99.35 % )269 பேர்,  விலங்கியலில் (99.51 % )36 பேர்,  கணினி அறிவியலில் (99.73 % ) 9,536 பேர், வணிகவியலில் (98.36 %) 1,624  பேர்,  கணக்கு பதிவியலில் (97.36 % )1,240  பேர்,  பொருளியலில் (98.17 %) 556 பேர்,  கணினி பயன்பாடுகள் பாடத்தில் (99.78 %) 4,208  பேர்,  வணிகக் கணிதம் மற்றும் புள்ளியலில் (98.78 %) 4,208  பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்.

அறிவியலில் 96.99 % ,   வணிகவியல் பாடத்தில் 92.68 %,  கலைப்பிரிவில் 82.90 %,  தொழில்பாடப் பிரிவில் 84.22 %  பேர் தேர்வாகியுள்ளனர். 

மாவட்ட வாரியாக… சதவிகிதம் (%) 12th public exam result

மேலும் தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பொதுத் தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

தேர்வு முடிவு வெளியாகியிருக்கும் நிலையில், பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை அரசு உறுதிசெய்யும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 12th public exam result

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share