12 மணி நேர வேலை மசோதா: தங்கம் தென்னரசு விளக்கம்!

Published On:

| By Jegadeesh

12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அது தொடர்பான விளக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் கடைசி நாளான இன்று(ஏப்ரல் 21) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது, தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார்.

இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

“வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், “வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்.

இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை. விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மணீஷ் காஷ்யப் கைது: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

12 மணி நேர வேலை: மசோதா நிறைவேற்றம், திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share