11,12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதன் முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. 4,05,472 (96.70 %) மாணவிகளும், 3,47,670 (93.16 %)  மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு தயாராகி வருகின்றனர்.

தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜூலை 25ஆம் தேதி துணை தேர்வு முடிவுகள் வெளியானது.

ADVERTISEMENT

இந்தநிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று (ஆகஸ்ட் 5) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“மார்ச் 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மதிப்பெண் பட்டியல் 07.08.2026 அன்று முதல் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share