நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 11.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
2024 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்தில், நிலக்கரி மற்றும் கோக் இறக்குமதி மொத்தம் 12.118 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 10.873 கோடி டன்னை விட இது 11.4 சதவிகிதம் அதிகம். இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 5.4 சதவிகிதம் உயர்ந்து 2.07 கோடியாக இருந்தது.
ஆகஸ்ட் 2024-ல் மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.189 கோடி டன்னிலிருந்து 1.303 கோடி டன்னாக இருந்தது. அதே நேரத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு 0.462 கோடி டன்னிலிருந்து 0.453 கோடி டன்னாக இருந்தது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலகட்டத்தில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 7.868 கோடி டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 6.858 கோடி டன்னை விட இது அதிகமாகும்.
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2024 நிதியாண்டில் 7.7 சதவிகிதம் உயர்ந்து 26.824 கோடி டன்னாக இருந்தது. இதையடுத்து புதைபடிவ எரிபொருளின் உள்நாட்டு உற்பத்தியை இந்தியா அதிகரிக்க வேண்டும், அதே வேளையில் நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி முன்பு தெரிவித்திருந்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.48 சதவிகிதம் உயர்ந்து 38.408 கோடி டன்னாக உள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான நிதியாண்டில் உற்பத்தியானது 36.071 கோடி ஆக இருந்தது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள் இதோ…
ஹெல்த் டிப்ஸ்: தினமும் பிரெட் சாப்பிடுபவரா நீங்கள்… உடல் எடை அதிகரிக்கலாம்!