தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இ-பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், புனரமைக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட பேருந்துகளை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகளாக மாற்றி இயக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் 10,020 பேருந்துகள் ஈடு செய்யப்படும். போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடந்த கால அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யும் பணி நடைபெறாமல் போனதே, இந்த அளவுக்குப் பேருந்துகளின் நிலை மாறியதற்குக் காரணம். கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது 15,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த 2011 முதல் அதிமுக ஆட்சியின்போது வெறும் 14,000 பேருந்துகள்தான் வாங்கப்பட்டுள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப இன்னும் சிறிது காலம் ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழக அரசின் கீழ் இயங்கும் எட்டு மண்டலங்களில் இயக்கப்படும் 10,020 பழைய பேருந்துகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை இந்த ஆண்டுக்குள் வெளியேற்றப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
”இவிஎம் இயந்திரங்களை அகற்றுங்கள்” : எலான் மஸ்க் கோரிக்கை!
தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் பலி!
டாப் 10 நியூஸ் : எடியூரப்பா பாலியல் வழக்கு விசாரணை முதல் மின் கட்டண உயர்வு அமல் வரை!
