ரூ.1000 பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Jegadeesh

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு இன்று (அக்டோபர் 28 ) தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக இன்று (அக்டோபர் 28 ) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.

ADVERTISEMENT

தற்போது இவ்வலைதளத்தில் http://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிவரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது 2,3 மற்றும் 4 ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை,

காலை 10 மணி முதல் 5 மணி வரை -9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் 11.11.2022 க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிரக்னன்சி கிட்: ரசிகர்களை குழப்பிய நடிகைகள்!

“சத்யாவை கொல்ல 10 நாள் திட்டம்” – கொலையாளி சதீஷ் திகில் வாக்குமூலம்!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share