சிறுபான்மை மக்கள் எப்போதும் என்னை நேரில் சந்திக்கலாம். உங்களோடு வாழ்பவன் உங்கள் பிரச்சினை என்ன என்பதை என்னால் நன்கு உணரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 1000 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியில் இணையும் விழா இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக இருப்பது போன்ற ஒரு தோற்றம் திமுகவினர் ஏற்படுத்தினர். அது இன்று பொய்யாகிப் போனது.
பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த போது தமிழ்நாட்டில் அமைதி நிலவியது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மை மக்களை பாதுகாத்தார்.
அதிமுக எப்போதும் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும். அதிமுக இனம் மதம் என்று பேதம் பார்ப்பதில்லை. ஜனநாயக இயக்கம் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது கண்டு திமுக பயப்படுகிறது.
சிறுபான்மை மக்கள் எப்போதும் என்னை நேரில் சந்திக்கலாம். உங்களோடு வாழ்பவன் உங்கள் பிரச்சினை என்ன என்பதை என்னால் நன்கு உணரமுடியும்.
1999 ல் பாஜக உடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி திமுக. நாங்கள் கொள்கையை விட்டு தர மாட்டோம். திமுகவை போல சந்தர்ப்பவாதம் பேசும் கட்சி அதிமுக இல்லை.
காவிரி நீர் பெற உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று கொடுத்தது அதிமுக. ஆனால் அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகா மாநிலத்தில் கூட்டணி பேச செல்கிறார்.
55 டிஎம்சி தண்ணீரில் 10 டிஎம்சி தண்ணீர் கொடுக்க கர்நாடகா அரசை ஸ்டாலின் வற்புறுத்தியிருக்க வேண்டும். 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்கள் கருகி போய்விட்டது. நிச்சயமாக அரிசி விலை உயர்வு வரும். மளிகை சாமான்கள் விலை 40 விழுக்காடு வரை ஏற்கெனவே உயர்ந்து விட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கட்சியே குடும்ப கட்சியாக மாறிவிட்டது. எடப்பாடிக்கு தில்லு, திராணி, தெம்பு இருக்கான்னு உதயநிதி கேட்டாரு. அதெல்லாம் இருப்பதால் தான் நாங்கள் இன்று மக்களை சந்திக்கிறோம்.
உங்களுக்கு அந்த தில்லு, திராணி, தெம்பு இருந்தால் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நானியை அச்சுறுத்தும் எஸ்.ஜே.சூர்யா
SAvsENG: 8 வருடங்களுக்கு பின்… இங்கிலாந்தின் படுதோல்வியை ரசித்த தென் ஆப்ரிக்கா!

Comments are closed.