கலைஞருக்கு நாணயம் : ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கமல் தீர்மானம்!

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக முயற்சித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மக்கள் நீதி மய்யம் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று  மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

கட்சி நிர்வாகப் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில், விதிமுறைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள கட்சி நிர்வாகக் குழுவுக்கு முழுப் பொறுப்பும் இன்றைய கூட்டத்தில் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

Image

தொடர்ந்து,

ADVERTISEMENT

`நம்மவர் நூலகம்’ உருவாக்கத்தில் பங்களித்த நிர்வாகிகளுக்குப் பாராட்டு,

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நாணயம் வெளியிட முயற்சித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தல்,
மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அளித்தல்,

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, உரிய திட்டங்களைச் செயல்படுத்தல்,

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,

மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கடும் சட்டங்களைக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மீண்டும் இணையும் குருவாயூர் காம்போ!

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share