வருமானத்தை குறைத்து பொய் கணக்கு காட்டினால் 100 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
வருமான வரி மாற்றம் தொடர்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய (பிப்ரவரி 1) பட்ஜெட்டில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும், வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும்.
விபத்து காப்பீட்டுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
தனி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்படும்.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 2 சதவிகிதமாக வரி குறைப்பு.
மருத்துவம், கல்வி செலவுக்கு வரி பிடித்தம் 5 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்படும்.
டேட்டா மையம், கிளவுட் கம்புயூட்டிங் நிறுவனங்களுக்கு 2047 வரை வரி கிடையாது.
எளிமைபடுத்தப்பட்ட வருமான வரி தாக்கல் படிவம் விரைவில் வெளியிடப்படும்.
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கம்.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் EVல் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிக்கு வரி இல்லை.
வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் தாக்கல் செய்யப்பட்டாலோ 100 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
தனிநபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட படி,
4 லட்சம் வரை இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5%
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10%
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15%
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20%
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25%
ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி விதிக்கப்படும்
