ஈ.சி.ஆரில் 100 பைக்குகள் பறிமுதல்… சில்வண்டுகளை பொறி வைத்து பிடித்த போலீஸ்

Published On:

| By Kumaresan M

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், இருச்சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வதால், உயிரிழப்புகள் ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இதைத்தடுக்க போக்குவத்துத்துறை துணை கமிஷனர் சமேசிங் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தாம்பரம்,  ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் ராஜீவ் காந்தி சாலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் மின்னல் வேகத்தில் சென்ற 100 இளைஞர்களை பிடித்துள்ளனர். இவர்கள் வைத்திருந்த அனைத்து பைக்குகளும் அதிக பவர் கொண்டவை ஆகும். அதோடு, பிடிபட்டவர்களில் பலரும்  சிசிடிவி கேமராக்களில் வாகனத்தின் நம்பர் பிளேட் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக நம்பர் பிளேட்டை கர்ச்சிப் கொண்டு கட்டி மறைக்கவும் செய்திருந்தனர். இந்த பைக்குகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து, போக்குவரத்து துணை கமிஷனர் சமேசிங் மீனா கூறுகையில், “ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயது குறைந்த இளைஞர்களுக்கு மட்டுமே திருந்த வாய்ப்பு கொடுக்கிறோம். மற்றவர்கள் மீது கடும் நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. சிலர் மாணவர்களாக இருப்பதால் போலீஸ் நிலையத்தில் எழுதி வாங்கிக் கொண்டு விடுவிக்க வேண்டியது உள்ளது.

இத்தோடு திருந்தி கொண்டால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியது இருக்கும். சாலையில் இப்படி அதிவேகமாக பைக் ஓட்டுவது அவர்களின் உயிருக்கு மட்டுமல்லாமல் சாலையில் நடந்து போவோர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர்!

உதயநிதி பிறந்தநாள்… தாய், தந்தையிடம் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share