சிவகார்த்திகேயனை ஆக்‌ஷன் ஹீரோ ஆக்கிய ‘காக்கி சட்டை’!

Published On:

| By uthay Padagalingam

10 Years of Kaaki Sattai Movie

தமிழ் திரையுலகில் ஒரு நடிகர் நாயகன் ஆவதும், நட்சத்திரம் ஆவதும் ஒரே திரைப்படத்தினால் நிகழாது. ஏனென்றால், ஒவ்வொரு திரைப்படமும் உயர்வினைத் தந்து வேறொரு உயரத்தை நோக்கி நகர்த்தும். Kaaki Sattai Movie

அந்த வகையில், சிவகார்த்திகேயனை நடிகராக அறிமுகப்படுத்திய படங்களாக ‘மெரினா’, ‘3’ ஆகியன அமைந்தன. அவரை முழுமையான நாயகனாக ஆக்கியது ‘மனம் கொத்திப் பறவை’. ’எதிர்நீச்சல்’ அவரது நடிப்பையும் தோற்றத்தையும் ‘பாலீஷ்’ போட்டது என்றால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அவருக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் காட்டியது.

அந்த வரிசையில், அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்திய படம் ‘காக்கி சட்டை’. எதிர்நீச்சல் தந்த கையோடு, சிவகார்த்திகேயனை நாயகனாகக் கொண்டு துரை.செந்தில்குமார் இயக்கிய இரண்டாவது படம் இது. Kaaki Sattai Movie

தனுஷுக்கான கதை! Kaaki Sattai Movie

10 Years of Kaaki Sattai Movie

போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் ஒரு இளைஞன் உடலுறுப்பு கொள்ளையில் ஈடுபடும் ஒரு மாபியா தலைவனைச் சட்டத்தின் முன் நிறுத்தப் போராடுவது தான் ‘காக்கி சட்டை’ படத்தின் ஒருவரிக்கதை.

’ஆடுகளம்’ படத்தில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய காலகட்டத்தில், தனுஷ் நடிப்பில் இக்கதையை உருவாக்கத் திட்டமிட்டிருந்தாராம் துரை.செந்தில்குமார். அது ஏன் நிகழவில்லை என்று தெரியவில்லை. ஆனால், இன்றுவரை தனுஷ் காவல் துறை சார்ந்த பாத்திரத்தில் நடித்ததே இல்லை. அதேநேரத்தில் சிவகார்த்திகேயனைக் கொண்டு அவர் இப்படத்தைத் தயாரித்தார்.

எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று காமெடி கதகளி ஆடிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன், ‘நமக்கெல்லாம் டான்ஸ், பைட் எல்லாம் வராதுங்க’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார். ‘மான் கராத்தே’வில் இரண்டிலும் திரையில் தன்னால் ஜொலிக்க முடியும் என்று காட்டியிருந்தார். அந்த திரைக்கதையின் பெரும்பகுதி காமெடியில் ஊறவைக்கப்பட்டதால், அவர் ‘ஆக்‌ஷன்’ காட்சிகளில் நடித்தது பெரிதாகக் கிண்டலடிக்கப்படவில்லை. Kaaki Sattai Movie

ஆனால், ‘காக்கி சட்டை’ கதையோ முழுக்க ஆக்‌ஷனை மையமாகக் கொண்டிருந்தது. அதனால், தான் ‘ட்ரோல்’ செய்யப்படும் அபாயத்தை அறிந்திருந்தும் துணிந்து ‘மதிமாறன்’ எனும் நாயக பாத்திரத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். Kaaki Sattai Movie

சிறப்பான ஆக்கம்! Kaaki Sattai Movie

திரைக்கதையில் நகைச்சுவையின் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும், ஆக்‌ஷன் காட்சிகள் எவ்வாறு ரசிகர்களால் உள்வாங்கப்பட வேண்டும் என்று சரியாகத் திட்டமிட்டிருந்தார் துரை. செந்தில்குமார்.

10 Years of Kaaki Sattai Movie

இரண்டையும் ஒருங்கிணைப்பது சவாலானது என்றபோதும் சிவகார்த்திகேயன் – துரை.செந்தில்குமார் கூட்டணி அதனைச் சாதித்தது. ‘காக்கி சட்டை’ படத்தின் முன்பாதியில் ரசிகர்களை காமெடி ஈர்த்தது என்றால், பின்பாதியில் ஒரு ‘ஆக்‌ஷன் ஹீரோ’ ஆக மாறியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், அவரது திரை வாழ்வில் அப்படத்தின் வசூலைக் காட்டிலும் பெரிய வெற்றியாக அந்த மாற்றம் அமைந்தது.

 ‘காக்கி சட்டை’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் போல ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக அமையவில்லை. அப்படத்தில் இருந்த ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் விரும்பவில்லை என்று அப்போது காரணம் சொல்லப்பட்டது. ஆனால், தொலைக்காட்சியில் அப்படம் ஒளிபரப்பப்படும்போது கிடைக்கும் ‘டிஆர்பி’ அந்த வாதத்தைத் தலைகீழாக்கியிருக்கிறது.

இந்தப் படம் குறித்து யோசிக்கும்போதெல்லாம், எனக்கு ஒரு ஷாட் தான் நினைவுக்கு வரும்.

அது, வில்லனாக வரும் விஜய் ராஸின் ஆட்கள் துரத்தும்போது சிவகார்த்திகேயன் நெடுஞ்சாலையில் ஓடுவார். ஓரிடத்தில் நின்று சிரித்தவாறே வசனம் பேசுவார். அதனைக் கேட்டதும் விஜய் ராஸ் திடுக்கிடுவார். அப்போது சிவகார்த்திகேயன் பின்னால் ஒரு லாரி வருவதாகக் காட்டப்படும். வசனம் பேசப் பேச அது அருகே வந்துவிடும்.

மிக அருகே வந்ததும், ஒரு அடி முன்னால் வந்து திரும்பி நிற்பார் சிவகார்த்திகேயன். அவருக்குப் பின்னால் ஹாரன் அடித்தவாறே அந்த லாரி கடந்துபோகும். ‘ஹீரோயிசத்தை’ அபாரமாக வெளிப்படுத்துகிற ஷாட் அது.

போலவே, கிளைமேக்ஸ் காட்சியில் அரசியல் பிரசாரக் கூட்டத்தின் நடுவே வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுகளால் புகை மண்டலம் ஏற்படும். அதனூடே பிஸ்டல் உடன் சிவகார்த்திகேயன் நடந்து வருவார்.

மேற்சொன்ன காட்சிகளில் எல்லாம் வெறுமனே ‘ஹீரோயிசத்தை’ தாங்கிப் பிடிக்கிற வகையில் பின்னணி இசையை அமைக்காமல் நகைச்சுவை தொனிக்க அமைத்திருப்பார் அனிருத்.

‘டாக்டர்’ படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிக்கு முன்னால் படகில் ஒற்றையாளாக சிவகார்த்திகேயன் வரும் ஷாட் ஹீரோயிசத்தின் உச்சமாக இருக்கும். ‘காக்கி சட்டை’ அம்மாதிரி ஷாட்களுக்கான தொடக்கமாக இருந்தது.

10 Years of Kaaki Sattai Movie

இது தவிர இப்படத்தில் இமான் அண்ணாச்சியுடன் நகைச்சுவை, கல்பனா மற்றும் சுசித்ரா உடன் சென்டிமெண்ட் காட்சிகள், நாயகி திவ்யா உடன் காதல் கண் கட்டுதே உள்ளிட்ட டூயட் பாடல்கள் என்று தனது ரசிகர்கள் விரும்பும் ‘கமர்ஷியல் காக்டெயில்’லை தந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

‘அமரன்’ படத்திற்குப் பிறகு ஒரு முழுமையான ‘ஆக்‌ஷன் ஹீரோ’ ஆக பரிமளிக்கிறார் சிவகார்த்திகேயன். முருகதாஸின் ‘மதராஸி’, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ என்று அவரது அடுத்தடுத்த படங்கள் அந்த இமேஜை இன்னும் உயர்த்தக் காத்திருக்கின்றன. அதனால், அவற்றுக்கு அடித்தளம் அமைத்த படம் என்று நிச்சயமாக ‘காக்கி சட்டை’யைச் சொல்லலாம். அதற்கான பாராட்டின் பெரும்பகுதி இயக்குனர் துரை.செந்தில்குமாரையே சாரும்.

இன்றோடு ‘காக்கி சட்டை’ வெளியாகிப் பத்து ஆண்டுகள் ஆகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share