ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 vehicles met accident jointly in hosur highway
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரப்பள்ளி காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது சரக்கு லாரி மோதியது. அப்போது அதனை பின் தொடர்ந்து வேகமாக வந்த கார், பைக், அரசு பேருந்து என 10 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின.
இந்த சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 3 பேர் உயிரிழந்தனர். 20க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த பயங்கர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
