மேற்கு வங்கத்தில் டிரக் மீது பேருந்து மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 19ல் இன்று (ஆகஸ்ட் 15) காலை 7 மணி அளவில் 6 குழந்தைகள் உள்ளிட்ட 45 பேருடன் தனியார் பேருந்து ஒன்று பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பர்த்வான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும், கங்கை நதியில் புனித நீராடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
