தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 ips officers transfer
இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (மார்ச் 25) பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார், மதுரை டிஐஜியாகவும்
திருநெல்வேலி டிஐஜி பா.மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கிற்கு திருநெல்வேலி டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை இணை ஆணையர் சக்திவேல், சென்னை மாநகர உளவுத்துறை- பிரிவு -1, இணை ஆணையராகவும்,
சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை இணை ஆணையராகவும்
காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையர் மேகலினா இடென் சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராகவும்
மயிலாப்பூர் இணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையராகவும்
தமிழ்நாடு கமாண்டோ சிறப்புப் படை எஸ்.பி. கார்த்திக், மயிலாப்பூர் இணை ஆணையராகவும்
ஈரோடு எஸ்.பி. ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பியாகவும்
திருப்பூர் வடக்கு சரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சுஜாதா, ஈரோடு எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 10 ips officers transfer