திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் இன்று (செப்டம்பர் 7) காலை எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் குறித்து பல கருத்துகளை கூறினார்.
பழனிசாமி மேலும் கூறுகையில், ”தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும், பாசமுள்ள கட்சி அதிமுக தான். திமுகவைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னோடு பேசி வருகின்றனர்.
திமுக என்பது குடும்பக் கட்சி. சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே உள்ள, எந்த பதவியும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். இதுதான் திராவிட மாடல்.
அதிமுக தொண்டர்களால் ஆளுகின்ற கட்சி. தொண்டர் என்ற முறையில் இங்கு வந்துள்ளேன். ஓபிஎஸ் சசிகலா மற்றும் தினகரனை தொண்டர்கள் ஏற்றுகொள்ளவில்லை.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடை பயணம் செல்கிறார். அதில் கருத்து சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.
தெலுங்கானாவில் சிலிண்டர்களில் மோடி படம் ஒட்டியது குறித்து என்னால் கருத்து கூற முடியாது.”என்றார்.
பழனிசாமியும் பத்து பேரும் விரைவில் தண்டனை அடைவர்: டிடிவி தினகரன்