நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் அவர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களைத் தொகுத்து தயாராகி உள்ள ‘நயன்தாரா: பியாண்ட் தெ ஃபேரிடேல்’ ஆவணப்படம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வெளியானது. ட்ரெய்லர் வெளியான பின்பு நடிகரும் ‘நானும் ரௌடி தான்’ படத்தைத் தயாரித்த ‘வண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான தனுஷ், ‘நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக நயன்தாராவிடம் நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நானும் ரௌடி தான் படத்தின் பாடல்களை எங்களின் திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ( தனுஷ்) அனுமதி கேட்டிருந்தோம்.
ஆனால், ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு நீங்கள் அனுமதி தராமல் இழுத்தடித்ததால், நாங்கள் அந்த காட்சிகள் இல்லாமல் படத்தை எடுத்து முடித்தோம்.
இந்த நிலையில், டீசர் வெளியான பின்பு, ‘நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எங்கள் போனில் எடுத்த 3 நொடி காட்சியை எங்களின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நீங்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மைக் டைசன் அவுட்: ஒரு டிக்கெட் விலை 17 கோடி!
மைக் டைசன் அவுட்: ஒரு டிக்கெட் விலை 17 கோடி!