ஹெல்த் டிப்ஸ்: செரிமானம் காக்க 10 கட்டளைகள்!

Published On:

| By christopher

இன்றைய வாழ்க்கை சூழலில் துரித உணவு, நேரம் தவறி சாப்பிடுவது போன்றவற்றால் அனைத்து வயதினருக்கும் செரிமானப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த 10 கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

1. ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

2. சரியான நேரத்துக்குக் காலை, மதிய உணவுகளைச் சாப்பிட வேண்டும், இரவு உணவை படுக்கைக்குச் செல்லும் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு முன்னராக முடித்துவிட வேண்டும்.

3. எல்லா காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றையும் சாப்பிடுங்கள். தென்னிந்திய உணவு முறைதான் செரிமானத்துக்கு மிகவும் ஏற்றது.

4. ஒரு நாளின் உணவில், ஐந்தில் ஒரு பங்கு நிச்சயம் காய்கறிகள் இருக்க வேண்டும்.

5. தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அவசியம்.

6. குளிர் பானங்கள், பாக்கெட் சிப்ஸ், டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், மைதா உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.

7. வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான சிறுதானிய நொறுக்குத்தீனிகள், கடலை மிட்டாய், இனிப்பு வகைகள் போன்றவற்றை அளவோடு சாப்பிடுங்கள்.

8. மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. தினமும் ஒரு எண்ணெய் என எல்லா வகையான எண்ணெய்களையும் பயன்படுத்துங்கள். செக்கில் ஆட்டிய எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது. சூடுபடுத்தும்போது சீக்கிரம் புகை வந்தால், அது பயன்படுத்த உகந்த எண்ணெய், எவ்வளவு சூட்டையும் தாங்குகிறது எனில் அந்த எண்ணெய் வேண்டாம்.

9. மன அழுத்தம் வேண்டாம். விளையாட்டு, உடற்பயிற்சி நிச்சயம் வேண்டும். தியானம் நல்லது.

10. சுய மருத்துவம் செய்யக் கூடாது. தேவையான சமயங்களில் தகுந்த மருத்துவரை அணுகுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பாசிப்பயறு வெல்ல சுண்டல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி… மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ்வா? அமுதாவா? கோட்டை ரேஸ்!

பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்துக்கு உதவும் ஃபேஸ் பேக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share