மதுரையில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட்: பணிகள் தீவிரம்!

Published On:

| By christopher

மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை கரிமேட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டது.

ADVERTISEMENT

இந்த மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் கேரளா உள்பட பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் இருந்து தினமும் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.

கொரோனா காலத்தில் இந்த மீன் மார்க்கெட் பொதுமக்கள் வசதிக்காக, தற்காலிகமாக மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் பின் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

கொரோனா முடிவுக்கு பிறகு, இந்த மீன் மார்க்கெட்டை, பேருந்து நிலையம் அருகே இருந்து மாற்று இடத்திற்கு மாற்றுவதற்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், மீன் வியாபாரிகள், மாட்டுத் தாவணி பகுதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்களை கொண்டு வருவதற்கு வசதியாக இருப்பதாகவும், இந்த இடத்தை மாற்றக்கூடாது என்றும் ஆளும்கட்சி பிரமுகர்களை சந்தித்து மாநகராட்சியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கரிமேட்டில் பழைய மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் அறிவியல் மையம் அமைவதால் மத்திய, மாநில மீன் வளத்துறை சார்பில் வழங்கப்படும் நிதி மூலம், மதுரையில் மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடியில் பிரம்மாண்டமான புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி தீவிரமாக தேடி வருகிறது. விரைவில் இடம் தேர்வானதும், கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விடும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர், “தற்காலிகமாக நாங்கள் ஓர் இடத்தை பார்த்து இறுதி செய்து வைத்துள்ளோம்.

மீன் மார்க்கெட் கட்டுவதற்கான நிதி வந்துவிட்டதால் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விடும்” என்று கூறியுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான்கு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் ரஜினி

கிச்சன் கீர்த்தனா : வரகரிசி கல்கண்டு பாத்

இது ரொம்ப முக்கியமாக விஷயம் : அப்டேட் குமாரு

லட்டு சர்ச்சை – ஏ.ஆர்.டெய்ரி வழக்கு : கோர்ட்டு உத்தரவு!

ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’ படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share