உலகப் புகழ்பெற்ற நடிகையான மர்லின் மன்றோவின் பிறந்தநாள் இன்று. காற்றில் பறக்கும் ஸ்கர்ட், கண்களை மூடிக்கொண்டு சிரித்த முகத்தோடு இருக்கும் இவரது புகைப்படத்தை பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மாடலாக வாழ்க்கையைத் தொடங்கிய இவரது சொந்த வாழ்க்கை மிகவும் கசப்பானது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட இவர் காப்பகத்தில்தான் வளர்ந்தார். 1947ம் ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கினாலும், 1950ம் ஆண்டு முதலே பிரபலமடையத் தொடங்கினார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எப்.கென்னடியுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் அளவுக்குப் பின்னர் பிரபலமடைந்தார். கவர்ச்சிக்காக அறியப்பட்ட இவர், தனது சிறந்த நடிப்புக்காக கோல்டன் குளோப் விருதும் வென்றிருக்கிறார். நடிப்பு, மாடல்துறை மட்டுமில்லாது, பாடகியாகவும் இவருக்கு இன்னொரு முகம் உண்டு. உலகப்புகழ் பெற்ற பிளேபாய் இதழின் முதல் பதிப்பின் அட்டைப் படத்தில் இடம்பெற்றது இவரே. 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி இவர் தனது அறையில் இறந்துகிடந்தார். இவரது மரணம் இன்றளவும் புதிராகவே உள்ளது. தற்கொலையா அல்லது கொலையா என்ற சர்ச்சை இன்னும் தொடர்கிறது. இந்த மறக்கமுடியாத அழகியின் கல்லறையை இன்றுவரை மலர் கொத்துகள் அலங்கரித்து வருகின்றன.
மறக்கமுடியாத அழகி
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel