கால நிலைக்கேற்ற வகையில் உணவையும், உடைகளையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, அந்தந்த நேரங்களில் ஏற்படும் நோய்களில் இருந்தும், அசெளகரியங்களில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள உதவும். அந்த வகையில் தற்போது கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்:
மதிய உணவில் வெள்ளரி, தக்காளி, கேரட், சின்ன வெங்காயம், கொத்தமல்லி போன்ற காய்கறிகள் கலந்த சாலட் அல்லது ரைத்தா சாப்பிடுவது மிகவும் நல்லது.
குளிர்ச்சி தரக் கூடியது. சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய நீரைக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்வது நமது உடல் சமநிலையை மிகவும் மேம்படுத்தும். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, அதிக திரவ உணவுகளை உட்கொள்வது கோடையின் தீமைகளில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளும் வழியாகும்.