0360 டிகிரி நோட்புக்!

Published On:

| By Balaji

சாம்சங் நிறுவனம் நோட்புக் 7 ஸ்பின் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் மொபைல் விற்பனையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள நிலையில், அதன் புதிய மாடல் குறித்த எதிர்பார்ப்புப் பயனர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. அதன்படி அதன் கணினிகளின் விற்பனையும் அதிகரித்துவருகிறது. எனவே, பயனர்களை ஈர்க்கும்வகையில் 360 டிகிரி சுழலும் புதிய நோட்புக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நோட்புக் 7 ஸ்பின் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், 8GB RAM மற்றும் 256GB இன்டர்னல் வசதிகொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

15 மற்றும் 13 இன்ச் திரையளவு கொண்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஸ்மார்ட்பென் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன ப்ராசெஸ்சர் மற்றும் பிங்கர் பிரின்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாடல் விரைவில் விற்பனைக்காக வெளியிடப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share