இது தேர்தல் நேரம்!

Published On:

| By Balaji

அச்சரப்பாக்கத்தில் நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலின், நடந்துசென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தபோது, வியாபாரிகள் கொடுத்த இளநீரைக் குடித்தது தலைப்புச் செய்தியானது. இந்நிலையில், இன்று தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் வாக்கு சேகரித்தார். மதுராந்தகத்தில் தனது கூட்டணி சார்பாக பணிமனையைத் திறந்துவைத்தார். அதன்பின்னர் வாக்கு சேகரித்த அவர், அப்பகுதியில் அமைந்திருந்த டீக்கடையில் நிர்வாகிகளுடன் அமர்ந்து டீ குடித்தார். சுதீஷ் வாக்காளர்களுடன் எளிமையாகப் பழகும் இச்செயல் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share