ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

CBE Voter List

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறப்பு, இரட்டைப் பதிவு உள்ளிட்டவைகள் தொடர்பாக கோவை மாவட்டத்தில் இதுவரை 5,06,394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கோவை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. .

தமிழகம் கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமுறை 2026 தொடர்பான கணக்கீட்டுப்பணிகள் கடந்த நவம்பர் 4 ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் அனைத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதி சனிக்கிழமை (டிசம்பர் 6) வரையில் 5,06, 394 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறப்பு தொடர்பாக 1,13, 861 பேரும், கண்டறிய முடியாதவை, இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடர்பாக 3,92,533 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT


கணக்கீட்டுப் படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தற்போது வரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் முடிவடையும் நாளான டிசம்பர் 11 ம் தேதிக்குள் மாவட்டத்தில் மேலும் ஒரு லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share