விஜய் மல்லையாவை நாடுகடத்தினால் தான் இந்தியா கொண்டு வர முடியும் – ஜெயந்த் சின்ஹா

Published On:

| By Balaji

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ 9000 கோடிகளைக் கடனாகப் பெற்றுவிட்டு இங்கிலாந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை இந்தியா கொண்டு வருவதற்கு அமலாக்கத் துறை சார்பில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இண்டர்போல் மூலம் அவரைக் கைது செய்வதற்கு அமலாக்கத் துறை சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டு விட்டது. “அவரை நாடுகடத்துவதன் மூலமே இந்தியா கொண்டு வர முடியும்” என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார். “ஆனால் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்துவது எளிதான ஒன்றல்ல, பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அரசுத் தரப்பில் இதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது” என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share