பேஸ்புக், டிவிட்டர் சர்வர்களை இந்தியாவில் அமைக்க வேண்டும் இந்தியா கோரிக்கை

Published On:

| By Balaji

போலி கணக்குகள்மூலம் தீவிரவாதிகள் வதந்திகளைப் பரப்புவது அதிகரித்துள்ளது. ஆனால் ட்விட்டர், முகநூல் போன்றவற்றின் சர்வர்கள் அமெரிக்காவில் இருப்பதால் இவற்றைக் குறித்த தகவல்களை பெறுவதில் சிரமம் உள்ளது. சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலை. விவகாரத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபித் சயீத்தின் போலிக் கணக்கிலிருந்து தகவல்கள் பரவியபோது இந்தச் சிக்கல் எழுந்தது. எனவே, ட்விட்டர், முகநூலின் சர்வர்களை இந்தியாவிலும் அமைக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளதால் இந்திய அரசே சர்வர்களை அமைத்துத் தரவேண்டும் என்று ட்விட்டர், பேஸ்புக் கேட்டுக்கொண்டுள்ளது. அவற்றை ஒரு இந்திய நிறுவனமாக ஆக்கி, வேலைவாய்ப்பை வழங்கமுடியும் என்று கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share