தியானத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதோ பிரச்சினை இருக்கும்போல-அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

எதை கான்செப்ட்ல வைக்கிறது, எதை டைட்டில்ல வைக்கிறதுன்னு தெரியாம ஒரே பரபரப்பா இருக்கேன். சமயத்துல எந்த கான்செப்டும் இருக்காது. இல்லைன்னாங்காட்டி மொத்தமா வருவாங்க. கேப்டன் விஜயகாந்த் மாதிரி லெஃப்டு கைல பஸ் டிக்கெட் பிரச்சினைய மடக்கி, ரைட்டு கைல பொருளாதார வளர்ச்சிப் பட்டியல்ல பின்னாடி போனதை மடக்கி, வாய்ல ஒரு வருச ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்துக்கு விசிலடிச்சிக்கிட்டு இருக்கும்போது திடீர்ன்னு தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினையை கொண்டாந்துட்டாங்க. இருக்க பிரச்சினையை விடவும் முடியல, புதுசுக்கு ஆதரவு தரவும் முடியாம ஒரே ரப்ச்சரா போச்சு. சரின்னு, அந்தப் பிரச்சினையை ஒரு மேடையா போட்டு மேல ஏறி உக்காந்துக்கிட்டேன். அதாவது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதிப்பு குடுக்கலன்னு இன்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாருக்கும், அது ரொம்ப அவசியமானது இல்லை. கைல கிடைச்ச பறையை சும்மா விடமுடியுமா? அதான் ஒரு குத்து குத்திட்டு ஓரமா வெச்சிடலாம்னு அடிச்சிக்கிட்டு இருக்காங்க. தமிழ்த்தாய் வாழ்த்தை முழுசா இனிமேல் பயன்படுத்தனும்னு போராடாம இருந்தா சரிதான்னு பக்தர்கள் பதைபதைப்புடன் இருக்குறது உங்களுக்கு தெரியாததா என்ன. நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் ஒரு நல்ல நாக்காலி வாங்கியாந்துடுறேன். ஆமா, பின்ன குடியரசு தினம் வருதுல்ல.

**@Kozhiyaar**

ADVERTISEMENT

தமிழனா இருந்தா நாம எல்லாத்தையும் ஷேர் பண்ணுவோம், ஆனா எத பத்தியும் கேர் பண்ணிக்க மாட்டோம் என்பதே நம் பலவீனம்!!!

ADVERTISEMENT

**@HAJAMYDEENNKS**

குழந்தைகளை தவிர மற்றவர்கள் அங்கிள்னு சொன்னால் அதிர்ச்சியாகி விடுகிறார்கள் ஆண்கள்…!

ADVERTISEMENT

**Jeyachandra Hashmi**

‘பிப்ரவரி 14 ல் காதலர் தின எதிர்ப்பு போராட்டம் – இந்து முன்னணி’

உங்கூட சுத்துனவன்லாம் Ladies & Gentlewomen மாதிரியான படங்களலாம் பாத்துட்டு ஒருபால் காதலையே புரிஞ்சு ஏத்துக்கிட்டு இருக்கான். நீ இன்னும் சாதி மதம்னு ஆணும் பெண்ணும் காதலிக்கறதயே எதுத்துட்டு இருக்க… !!

**@மெத்தவீட்டான்**

நாட்டின் முன்னேற்றத்தை பற்றி பேசுபவர்களில் முக்கால்வாசி பேர் பக்கத்து வீட்டுக்காரன் முன்னேறுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்…!

**@senthilcp**

தமிழகம் விரைவில் காவியாகும்-தமிழிசை

நாட்டு நிலவரம் தெரியாம பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கீங்க,இங்கே காவியை காலி பண்ணிட்டு இருக்காங்க

**@itzkarthik_v**

வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான். 47 வது இடத்தில் பாகிஸ்தான் 62 வது இடத்தில் இந்தியா- செய்தி

இவங்களுக்கு உள்நாட்ல ஒன்னா இருக்கும் மக்களிடையே மதச்சண்டைய தூண்டி விடவே நேரம் சரியா இருக்கு. அப்புறம் எங்க நாட்டு வளர்ச்சிய பார்க்க நேரம் இருக்க போது

**@fake_id1**

தவறு செய்வது இயல்பு

அதை திருத்துவதிலும் மறைப்பதிலும்தான் நம்முடைய சுயநலமும் பொதுநலமும் வெளிப்படுகிறது

**@kt_pugaz**

பழைய பேஷன்ட் ஆண்டாள்-வைரமுத்து வை

டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க,

புது பேஷன்ட்

தமிழ்த்தாய் வாழ்த்து-விஜயேந்திரரை அட்மிட் பண்ணிடுங்க..

**@Kartiktweaks**

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது சங்கராச்சாரியார்கள் எழுந்து நிற்கும் மரபு இல்லை -காஞ்சி சங்கர மடம்

எல்லையில் ராணுவ வீரர்கள் நிக்கும் போது

‏

**@amalorj**

இப்போதாவது ஒத்துக்குங்க: ஒரு மகா முனிவரின் தியானத்தையே கலைக்கும் சக்தி நமது நாட்டுப் பண்ணுக்கு உண்டு என்பதை..

**@rubi565656**

முட்டாளா இருக்க அறிவு கம்மியா இருக்கணும்னு அவசியமில்லை அதிக அன்பு காட்டினா கூட போதும்!

**S.VE.SHEKHER‏ **

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை” – தம்பிதுரை

BJP மத்தியில இல்லாட்டி இங்க உங்களுக்கே இடமில்லை. சுத்தமா துடைச்சு எறிஞ்சு ஒரு வருஷம் ஆயிருக்கும்.

**@pcshubha**

ஐந்துக்கும் வளையாது

ஐம்பதுக்கும் வளையாது.

ஐநூறு ஐயாயிரத்துக்கு

மட்டுமே வளையும்.

#லஞ்சம்

**Arun Mo**

கிடைத்த வாய்ப்பை ஏன் விட வேண்டும், மடம் மன்னிப்பு கோரும் வரை போராடுவோம். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மடம் எழுந்து நிற்கும் மரபு இல்லை என்றால், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் மரபு தமிழர்களுக்கு இல்லை என்று பேச ஆரம்பித்தால் என்னாவது? ஏ, மடமே தமிழர்களிடம் மன்னிப்புக்கேள் என்று வைரமுத்து பாட்டுப்படிக்க வேண்டும். அதை நான் கேட்க வேண்டும்.

**Jeyachandra Hashmi**

‘தேசிய கீதத்தை மதிப்பது போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதித்து எழுந்து நிற்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து’

In Other Words, வைரமுத்து Says ‘அந்த க்ரீஸ் டப்பாவ எப்படி உதச்ச..’

**Antony Kebiston**

எதிர்கட்சிகள் எதற்கு ?

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

எல்லா பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் தான் போராட வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் எதற்கு?

**@yugarajesh2**

‘அந்த கிரீஸ் டப்பாவை இப்படி தானே எட்டி உதைச்சேன்னு’ கவுண்டமணி, செந்திலிடம் கேட்கும் அதே மூடில் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனையில் எல்லாரும் இருக்காங்க போல.

**@HAJAMYDEENNKS**

முடி கொட்டுறது தலை போற விசயம்தான்…!

-லாக் ஆஃப்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share