ஜிடிபி: முரண்பாடுகளைக் குறைக்க அரசு முயற்சி – புள்ளியியல் துறைத் தலைவர்

Published On:

| By Balaji

(

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 7.9 சதவிகிதமாக உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்தது. இதன்மூலம் உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடாக இந்தியா அறியப்பட்டது. ஆனால் ஜிடிபி எனப்படும் இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ‘முரண்பாடுகள்’ உள்ளதாக சர்ச்சை எழுந்தன. இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகித உயர்வின் காரணம், எந்தத் துறையில் வளர்ச்சி அதிகம் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை என உலகம் முழுவதும் உள்ள பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புள்ளியியல் துறைத் தலைவர் டிசிஏ ஆனந்த், ஜிடிபி குறித்த தகவல்களில் உள்ள முரண்பாடுகளைக் குறைக்க அரசு முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய வருமானம் உற்பத்திமுறையிலும், செலவின முறையிலும் முரண்பாடான அளவாக இருந்தது. இது மட்டுமே ரூ.2.14 லட்சம் கோடி அளவுக்கு இருந்தது. இது, ஜிடிபி-யில் 1.9 சதவிகித அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர், ‘சில மாநிலங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருந்து குறித்தநேரத்தில் சரியான தகவல்கள் கிடைக்காத காரணத்தால் இந்த முரண்பாட்டின் அளவு அதிகரித்துள்ளது. வருங்காலங்களில் இது சரிசெய்யப்பட்டு ஜிடிபி குறித்த தகவல்கள் துல்லியமானதாக இருக்கும். தகவல்களின் அடிப்படையில் செய்யும் மாற்றமும், போதிய காலஅவகாசம் வழங்கப்படுவதன்மூலமும் இது சரி செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share