ஹலோ போயஸ் கார்டனா? இல்லை, போலிஸ் கார்டன்! -அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ஒரு வீட்டை கைப்பற்ற இத்தனை கேள்வி கேக்குறவங்க, நாட்டை கைமாத்துனப்ப ஒரு வார்த்தையாவது கேட்டீங்களா? இத்தனை நாள் பூ போட்டு கவனிக்காம இன்னைக்கு ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் சேரப்பொற நிகழ்ச்சிக்காக ஜெயலலிதா சமாதியை அலங்காரம் பண்றீங்களே, இதுக்காகத்தான் அந்தம்மா உங்களை வெச்சு கண்ணாமூச்சி ரே ரே ஆட்டம் ஆடுனாங்க. அதனாலதான் இப்பவும் நம்ம பிரதமர் மோடி இவங்களை இப்படி விளையாடிக்கிட்டு இருக்காரு. நீங்க சேர்ந்தாலும் சரி, அடிச்சிக்கிட்டாலும் சரி, என்ன பண்ணாலும் சரி… இனி அதிமுக என்ற கட்சி மோ(டி)திமுக கட்சி என்றே அழைக்கப்படும் என்பதை சொல்லிக்கொண்டு… ஆமா, அந்த டிடிவி-ன்னு ஒரு வெடி மலேசியால இருந்து வாங்கிட்டு வந்தாங்களே அது எப்பதான் வெடிக்கும்.

**Sara Sai Ramasamy**

ADVERTISEMENT

பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது

என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை …!!

ADVERTISEMENT

என் மனைவியை பயமுறுத்தும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறதே !!??

ADVERTISEMENT

**Narayanamoorthi Moorthi**

இரத்தத்தின் இரத்தங்கள்

இரத்த பிரிவுகளாக அணிபிரிந்து…

**Bharani Dharan**

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பு – பொதுப்பணித்துறை அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையால் பரபரப்பு

சமாதிக்கு முன்னாடி உட்கார்ந்து தூங்குற குருப் வர போகுதுன்னு அர்த்தம்

**செந்தில் ஜி**

பேசிட்டு ரெண்டு செகண்ட் பேச்ச நிப்பாட்ரதே எவனாச்சும் கைதட்ட மாட்டானாங்குற நப்பாசையில தான்.

**Rajkumar Vadivelu**

முன்னாள் முதல்வர் ஜெயலலீதா வீடு நினைவில்லம் ஆக்க சட்டப்படி வாரீசுகளின் ஒப்புதல் வேண்டும் …

கோர்ட் கேசுன்னு போனா தமிழக அரசு அசிங்கப்படும்.

**John Jebaraj**

புருசனை போட்டு மாட்டை அடிக்கிரமாதிரி அடிச்சி மண்டயை ஒடச்சி !!

டாக்டர்கிட்ட ஊசி போடும் போது டாக்டர் பாத்து அவர் வலி தாங்க மாட்டார்னு சொல்ராபாரு!!

அவ தான்யா பொண்டாட்டி!!

**ரூபிணி தேன்மொழி**

கேரளால வந்த கூட்டத்தை பார்த்து சன்னிலியோன் அழுதுருச்சாம்..

தமிழ்நாட்டுக்கு வந்து பாரு..????ஹார்ட் அட்டாக் வந்து செத்துருவ புள்ள செத்துருவ

**Kartik Raj P**

உங்களில் யார் அடுத்த ஓவியா?! பைத்தியங்களுக்கான தேடல் னு விஜய் டிவி காரன் ஒரு ஷோ நடத்துனாலும் ஆச்சரிய படறதுக்கு இல்ல..

**Prabhakaran Balakrishnan**

பெட்ரோல் விலை தினம் மாற்றம் இருக்கும்னு சொன்னவங்க ஏற்றம் மட்டும் தான் இருக்கும்னு சொல்லாம விட்டுட்டானுங்களே

**தினகரன் அரசு**

போயஸ் கார்டன் ஜெ.பங்களாவில் இருந்து சசி, தினகரன் ஆட்கள் வெளியேற்றம்- போலீஸ் கட்டுப்பாட்டில் வந்தது!

பேயஸ்கார்டன்

**Venkys Place**

சே! இந்தக் காலத்துப் பெண்களுக்கு துப்பட்டா நழுவி

கீழே விழறது கூட தெரியலையே…!

ஏன் அப்படி சொல்றே?

ரோட்டுல, பொண்ணோட துப்பட்டா விழுந்ததும் , துப்பட்டா…

துப்பட்டாம்மா’னு கத்தினேன்….

துப்பிக்கோ…, என்னை ஏன்

கேட்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டே இருந்துட்டா…!!

**Ravi Shankar**

2வயசு முத்துராமலிங்கம்,

40வயசு வாஞ்சிநாதனை சைக்கிள்ல வச்சு சுத்தலையா,அது மாதிரிதான்

‘ஜெ’ சாவை பத்தியும் சுத்த போறானுங்க.

**vinothanaseeli**

அரசு ஊழியர்கள் குழந்தையை அரசுபள்ளியில் படிக்கசொல்லி நிர்பந்திக்க முடியாது–தமிழகஅரசு

அப்ப ஹெல்மெட் மட்டும் போட சொல்லி நிர்பந்திகலமா ஆபிசர்

**Thaadikkaran**

எடப்பாடி அணியில் உள்ள எனது ஸ்லீப்பர் செல் MLA-கள் நேரம் வரும் போது வெளிப்படுவார்கள் டி.டி.வி.தினகரன்

இதே கேட்டு முருகதாஸே சிரிச்சுருபாரு!!

**vinizism**

திருப்பூர் முதல் சேலம் வரை விடாமல் துரத்தும் @மழை

**amuduarattai*8

தண்ணி போட்டு தள்ளாடி தகராறு பண்ணுபவர்களை கண்டுக்காத போலீஸ் தான், நல்ல ஸ்டெடியா பைக் ஓட்டிட்டு போறவங்களை நிறுத்தி ஊதச் சொல்லும்.

**Kannan_Twitz**

நிழலுக்காக மரத்தை தேடி போறவன் மனுசன்,

டுவிட் போட டவர்ர தேடி போறவன் பெரிய மனுசன்.

**தினகரன் அரசு**

நீட் தேர்வு.. மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு இருக்காது.. அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

குட்கா லஞ்சம், ஆர்கே நகர் 89 கோடி, குவாரி, ஏகப்பட்ட சொத்து இந்த வழக்கு எல்லாம் என்னாச்சு .. அதை சொல்லுங்க…. ப்ரோ

**Karthik Murugeasan**

ஜெயலலிதா மரண விசாரணையில்., அவங்க சாப்பிட்ட ரெண்டு இட்லி எங்க வாங்குனாங்கனு மட்டும் ஒரு ரெண்டு வருஷம் விசாரணை நடக்கும் .. வெட்டி வேலை !!

**Vadivel Paramasivam**

நிதி என்னுது பொதுப்பணி உன்னுது

ஓபிஎஸ்-ஈபிஎஸ்

**Rajini Vijay**

எதற்காக வாங்கப்பட்டதோ அதை தவிர மற்ற எல்லாத்துக்கும் உபயோகப்படுத்தப்படும் ஒன்றின் பெயர் தான் #டைனிங்_டேபிள்.

**Thippu Sulthan K**

ஆந்திராவில் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் வெடித்து வாலிபர் தொடை கருகியது..

அடங்கொன்னியா இனிமே மேல் பாக்கட்டுலயே வச்சிக்கணும் நெஞ்சு வெடிச்சி செத்தாலும் சாவலாம் ஆனா…

**Bharani Dharan**

மற்ற அணிகளில் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் “ஸ்லீப்பர் செல்ஸ்” போல இருக்கின்றனர் – டிடிவி தினகரன்

அந்த 8 பேர் தானே – எடப்பாடி

எப்படி கண்டுபிடிச்சிங்க – ஜெயகுமார்

அந்த 8 பேர் தான் அதிகம் நேரம் துங்குறாங்க டிடிவி தான் சொன்னாரே “ஸ்லீப்பர் செல்ஸ்”ன்னு – எடப்பாடி

டிடிவி பக்கம் சென்றார் ஜெயகுமார்

**Naresh Babu**

ஒயின் ஷாப்பில்

Brandy-க்கு வெறும் உப்புகடலை சைட் டிஷ் ஆக வைத்து அடிப்பவனுக்கு,

வெறும் beer-க்கு பல சைட் டிஷ் வாங்கி அடிப்பவனை பார்த்தால் கேலியாக தான் இருக்கும்

**சுபா வள்ளி**

இப்படிதான் நம்மாளு ஒருத்தர்க்கு டவுட் வந்துச்சாம்….

வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேணும்னு பிரசங்கம் பண்ணிட்ருந்தாராம்

சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சார் சம்பந்தம்?

நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

சரி இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

எப்படி சார் சொல்றீங்க?

ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

நான் மறுக்கலே இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி

பலே ஆள் சார் நீங்க பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

குடிச்சுப் பாருங்க சார் அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

-லாக் ஆஃப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share