இந்தியாவில் வெறும் 13 சதவிகித நிறுவனங்கள் / முதலாளிகள் மட்டுமே வரும் மாதங்களில் வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
*மேன்பவர் குரூப்* நிறுவனம் சார்பாக இந்தியாவில் வேலை உருவாக்கம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய வேலை சந்தை மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், 13 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே அடுத்த மூன்று மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கவிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 61 சதவிகித நிறுவனங்கள் தங்களது சம்பளப் பட்டியலை அடுத்த மூன்று மாதங்களுக்கு மாற்றப்போவதில்லை எனவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து மேன்பவர் குரூப் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குநரான சிந்தியா கோகலே *டைம்ஸ் ஆஃப் இந்தியா* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10 லட்சம் பேர் பட்டப்படிப்பை முடித்து கல்லூரிகளை விட்டு வெளியேறுகின்றனர். அதேபோல, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காணாமல் போகின்றன. எனவே, இந்தியா தற்போது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக முதலீடுகளை மேற்கொள்வதோடு, திறன் மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை நிரப்ப வேண்டும். நிறுவனங்கள் தங்களது பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைக்காவிட்டாலும், அடுத்த மூன்று மாதங்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஆர்வமாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)
**
**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**