தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: லோயர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.16,300 – 38,200/-
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.05.2018
மேலும் விவரங்களுக்கு [தூத்துக்குடி துறைமுக]( file:///C:/Users/Dotcom/Downloads/Application%20LDC194201841104.pdf ) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
