திருச்சி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள ஸ்டெனோ டைப்பிஸ்ட் கிரேடு – III பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 8
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் இணைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சி-620001 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் முழுமையான விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/Steno-Typist%20recruitment%20472017002_1.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
