தமிழக அரசு சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 186
பணியின் தன்மை: உதவிப் பேராசிரியர்
வயது வரம்பு: 01.07.2018 அன்று 40 வயது நிறைவடைந்தவராகவும், 45 வயதிற்குள்ளானவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் மற்றும் தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.7000
ஆணை வெளியிடப்பட்ட தேதி: 18.07.2018
இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.08.2018
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: [www.trb.tn.nic.in](www.trb.tn.nic.in) என்ற இணையதளம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: [http://trb.tn.nic.in/law2018/notification_law.pdf](http://trb.tn.nic.in/law2018/notification_law.pdf) என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
**ஆல் தி பெஸ்ட்**
