மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினம் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான ஒரு நாளாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் பிரச்சாரப் பயணங்கள், தொண்டர்களுக்கு மடல், அறிக்கைகள், பதிலடிகள் என்று மக்களவை மற்றும் இடைத் தேர்தல் வெற்றிக்கான முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஸ்டாலினுக்கு இது ஒரு மிக முக்கியமான தேர்தல் என்பதால், திமுக அதிக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கோவில்களில் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தியிருக்கிறார் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின். மே 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய துர்கா ஸ்டாலின், அதனை முடித்த கையோடு மே 21ஆம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று நாள் முழுவதும் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். உடனடியாக சென்னை திரும்பிய துர்கா, இன்று (மே 22) காலை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பண்ணை வீட்டுக்குச் சென்று அங்கும் திமுகவின் வெற்றிக்காக சிறப்பு யாகங்களை நடத்திவருகிறார்.

இதுபோலவே அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். எங்கே சுற்றுப் பயணம் சென்றாலும் அங்குள்ள கோவில்களில் வழிபாடு நடத்துவது இவரது வழக்கம். வருமான வரித் துறை ரெய்டு நடந்தபோது கூட தினகரன் தனது வீட்டில் கோ பூஜை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை தன்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தவர்களுக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அப்பாயின்மென்டை கேன்சல் செய்துவிட்டார் தினகரன். நாளை விடியும் நாள் அமமுகவிற்கு நல்ல நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக இரவு முதலே தனது இல்லத்தில் யாகத்திற்கும், சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமித் ஷா பேரம்… ஆடிப் போன ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/22/36)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி](https://minnambalam.com/k/2019/05/21/93)
**
.
**
[எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/05/22/43)
**
.
**
[பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!](https://minnambalam.com/k/2019/05/22/67)
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)
**
.
.
�,”