ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்த பலரும் வரிசை கட்டி களம் இறங்குகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்பதைத் தாண்டி அரசை கேள்வி கேட்க பலர் துணியாத போது இயக்குநர் வெங்கட் பிரபு நேரடியாக மோடியையே கேள்வி கேட்டு டிவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் **பிரதமரே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தினமும் புதிது புதிதாக சட்டம் கொண்டுவந்தீர்களே, ஆனால் இப்போது இந்த சட்டத்தை மாற்ற ஏன் எந்த வித நடவடிக்கையும் உடனே எடுக்காமல் இருக்கிறீர்கள்? யாரிடம் விளையாடுகிறீர்கள்?** என துணிச்சலாக கேட்டதோடு மட்டும் நிறுத்தாமல் அந்த பதிவில் மோடியின் டிவிட்டர் அக்கவுண்டை டேக் செய்தும் உள்ளார்.

நமக்கு எதுக்கு பிரச்சனை என்று ஒதுங்கிக் கொள்ளாமல், கூட்டத்தோடு ஒப்புக்கு ஆதரவு என்று கூறி முடிக்காமல் பிரச்சனையின் தீர்வை மட்டுமே கருத்தில் கொண்டு நேரடியாக பிரதமரையே கேள்வி கேட்டிருக்கும் வெங்கட் பிரபுவின் இந்த பதிவுக்கு போராடும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது.
