விஜய் தற்போது தளபதி 66 ‘வாரிசு’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு துணை வேடங்களில் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், மாஸ் ஆக்ஷன் படமாகவும், நல்ல பாடல்கள் கொண்ட படமாகவும் இருக்கும் என்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்படத்தில் வில்லனாக தனுஷை நடிக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. தனுஷ் ஏற்கனவே, “தி கிரே மேன்” என்ற ஆங்கில படத்தில், ‘நெகடிவ் ரோலில்’ நடித்திருப்பதால் தமிழில் வில்லனாக களமிறங்குவாரா? என்று ரசிகர்களிடையே பெறும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா