விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள்

Published On:

| By Balaji

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படத்தில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரமணியம்மாள் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுலுடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் மடோனா நடிக்கிறார். விஜய் சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ADVERTISEMENT

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீஸில் நடந்துமுடிந்துள்ளது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துவருகிறார். இவருடைய இசையில் தற்போது பாடல் பதிவு நடந்துவருகிறது. இதில் இடம்பெறும் சிறப்புப் பாடலை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ரமணியம்மாளைப் பாடவைத்திருக்கிறார் சித்தார்த் விபின்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜுங்கா படத்திற்காக ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் ஒரு பாடல் பாடியிருக்கிறார். கனவுகளை நிறைவேற்ற வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ரமணியம்மாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி – கோகுல் கூட்டணியில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் ஹிட்டானதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share