கிருஷ்ண குமார்
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
இயந்திரம், நகரமயமாக்கல்னு என்னதான் நாம நேரத்த இழுத்துப்பிடிச்சு ஓடினாலும் நாம நம்ம மேல வெச்சிருக்க அக்கறைய காட்டாம இருந்ததில்ல, இருக்கவும் கூடாது. காரணம், அத்தனை நேரத்தையும் நாம செலவு பண்ண காரணம், இந்த அரை சாண் வயித்துக்கும் மீதி கொஞ்சம் மனசுக்கும்தான். என்னதான் சுயமா ஒருத்தர் தன்னோட உடம்பு மேல, தன்னோட உடல்நலன் மேல அக்கறை வெச்சிட்டு உடற்பயிற்சி செய்தாலும் மக்களுக்கு எப்பவுமே இன்னொருத்தர பார்த்து வியந்து விரும்பி அவங்கள பின்தொடர்வதுதான் பழக்கமா இருக்கு.
சமீபத்துல வந்த ‘மெர்சல்’ திரைப்படத்துக்கான டீசர்ல வழக்கம்போல தன் ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பை அதிகமாகவே ஈடுகட்டிருக்கார் தளபதி. அவர் மேல இருக்கற விமர்சனம், இதுவரைக்கும் பெருசா தோற்றத்துலயோ, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள்லயோ எந்தவொரு மாற்றமும் இல்ல அப்படிங்குறதுதான். அப்படி இருக்க மூணு கதாபாத்திரம் இருக்கற இந்தப் படத்துக்கு அவர் ஒப்புக்கிட்டு நடிக்குறதுங்குற ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பண்ணிருந்தா ஏத்துக்குற அளவுல இருந்திருக்கும். ஆனா, இப்போ அவர் செய்றார்னா அதுக்கான மாற்றத்தை காட்டுவாறாங்குற எதிர்பார்ப்பு முதல் வரிசையிலயே சீட்ட புடிச்சு உட்கார வைத்திடும்.
கிராமத்தில் காளை வளர்க்கும் விவசாயி, ஒரு மாயஜால தந்திரங்கள் செய்யும் மேஜிசியன், கடைசியா பொதுமக்கள்ல ஒருத்தரா டாக்டர் கதாபாத்திரம்னு பரவலா பேசப்படுது.
இதுவரை தன்னோட வசன உச்சரிப்புகள்ல மட்டுமே மாற்றம் கொண்டுவந்த அவர் இதுல தோற்றத்துக்காக என்னென்ன செஞ்சிருப்பார், செஞ்சிருக்கார்னு உத்துப்பார்த்தோம்னா உடல்ல இருந்து உடல்மொழி வரை அவர் மாற்றம் கொண்டிருக்கார்னுதான் சொல்ல முடியும். காரணம் கதை எழுதியிருக்க விஜயேந்திர பிரசாத். பாகுபலில வர்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கான தோற்ற அமைப்பும், அவங்க கதாபாத்திரத்தை நம்ப வைக்கணும்ங்குறதுக்காகவே ஒவ்வொருத்தரையும் தேர்வு செஞ்சு, அவர்களுக்கான தனிப்பயிற்சிகள் கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பாக்க வெச்ச ராஜமெளலியின் அப்பா. அப்போ கண்டிப்பா மெர்சலின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கான உடல்மொழியும், உழைப்பும் மாறுபட்டுதான் இருக்கும்.

**விவசாயி, விவசாயி…**
காளை வளர்க்கும் விவசாயி. வடக்கே ஒரு இடத்தில் குஸ்தி விளையாடுறார். MGR ரசிகனாக வேற காட்டுறாங்க. அப்படினா எப்படியும் ஒரு 40 வருஷங்களுக்கு முன்னே நடந்த கதைன்னுதான் கருதணும். விவசாயிகளிடம் இயற்கையிலயே இருக்கற குணம், உழைப்பு, உணவு எடுக்கும் முறை, உறங்கும் முறை. அவர்களோட தினசரி வாழ்க்கையிலயே உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் ஒன்றிப்போயிருக்கும். ஒரு தினசரி வேலை எப்படி உடற்பயிற்சியா இருக்கும்ங்குறத பாகுபலி படத்தில விஜயேந்திர பிரசாத் திரைக்கதைல அருமையா காட்டியிருப்பார். தேவசேனா அரண்மனையில இருக்குற பாகுபலி மோர் கடையுற காட்சிய எல்லாரும் ஒரு வேலையா மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனா அது முதுகுக்கும், tricepsக்கும் குடுக்குற ஓர் உடற்பயிற்சி. ஒரு விவசாயி தினம் எழுந்து நீர் கொண்டு வருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, உழவு ஓட்டுவது, போர் அடிப்பது, நாத்து நடுவது, களை பறிப்பது, மடையில் நீர் அடைப்பதுன்னு செய்யுற ஒவ்வொரு வேலையையும் இப்ப farmers workout routineனு உடற்பயிற்சி நிலையங்கள்ல சொல்லித்தராங்க. விவசாயியாக வரும் விஜய் தாடி, முறுக்கிய மீசை மட்டுமில்லாம தோள்கள் விரிஞ்சும் தெரிகிறார். அதற்கேற்றார் போல முக்கால்வாசி மடித்து சுருட்டிய முழுக்கை சட்டையோட அழகாவும் தெரியறார்.
அடுத்ததா மேஜிசியன் கதாபாத்திரம். மந்திரமும் தந்திரமும் நிறைந்த அவர்களுக்கான skillsetகளில் முக்கியமானவையாக கருதப்படுபவை misdirection (கவனத்தை திசைதிருப்புதல்), sleight of hands (கைகளை சாதுர்யமாக உபயோகிப்பது), நகைச்சுவை, persuasion (தூண்டிவிடுவது), ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது என அனைத்தையும் கற்று தேர்ந்திருக்க வேண்டும். இதில் timing sense ரொம்பவும் முக்கியம். அதேபோல அவர்கள் பயன்படுத்தும் உடை. பெரும்பாலும் முழுக்கை சட்டையையே போட்டிருப்பாங்க. அதுலதான் அவங்க மொத்த ஜாதகமும் இருக்கும். Prestige, Illusionist போன்ற ஆங்கில திரைப்படங்கள் இத justify பண்ணும். மெர்சல் ட்ரெய்லர்ல வர மேஜிசியனான விஜய் அந்த மிகப்பெரிய அரங்கத்துல Magician Suit போட்டு நடந்துவருவதும் க்ளாஸ்.

அதேபோல அவரோட sleight of hands திறமையைக் காட்டுவதற்கு விரல்களின் இடையில் கண்ணாடி பந்துகளை அசால்ட்டாக சுத்துவதாக காட்டியிருக்கின்றனர்.

Peace Bro என சொல்ல கையை ஒருபக்கம் உயர்த்தி misdirection செய்துவிட்டு சட்டைக்குள்ள இருந்து புறா எடுப்பதும் எனக் காட்டி மேஜிசியனுக்குத் தேவையான தகுதிகளுக்காக இவரைத் தயார்படுத்தி இருக்காங்க.

Gogo Requiem, Raman Sharma, Dani Belev என மூன்று புகழ்பெற்ற மேஜிசியன்களிடம் இதற்காகத் தனிப்பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய். இதில் Gogo Requiem Playing cards வைத்து மேஜிக் செய்வதில் கைதேர்ந்தவர். Raman Sharmaம் Dani Belev-ம் ஒரு illusionist ஆகவே தங்களை முன்னிலை படுத்துகிறார்கள். வேடிக்கை பார்ப்பவை அனைத்தையும் நம்பவைக்கும் திறமையை எப்படி விஜய்க்கு சொல்லிக்கொடுத்திருப்பார் என திரையில்தான் பார்க்கணும்.
**முறுக்கேறிய உடல்**
இதெல்லாம் என்னதான் இருந்தாலும் மெர்சலில் கொஞ்சம் மெருகேறியிருப்பது இந்த விஜய்யின் உடலும் தான். Single hand triceps push ups, alternative single hand triceps push ups, clap push up-னு அதகளம் காட்டியிருக்கிறார்கள். விஜய் தன்னுடைய உடலமைப்பை இன்றும் Fit and neat ஆக வைத்திருப்பதற்குக் காரணமே அவருடைய தொடர்ச்சியான உடற்பயிற்சிதான். அதனால்தான் 40 வயதானாலும் இன்னமும் 30-க்குள்ளேயே இருப்பதாக தெரிகிறார்.

Single hand triceps push ups எல்லாம் ஆரம்ப கால உடற்பயிற்சியிலேயே எல்லாம் செய்ய முடியாது, அதுபோலதான் clapping push upsம். மார்புக்கு நடுவில் இருக்கும் கோடு டர்ர்ர்னு கிழியும். 10ஆவது push up போட்டு எந்திருச்சு நின்னா இளைப்பெடுக்கும். alternative single hand triceps push ups எல்லாம் அதுக்கும் மேல. டீசர்ல சரியா உத்துப்பார்க்கும்போது நல்லாவே தெரிகிறது.

மூணாவதா இருக்குற கதாபாத்திரம் சாமான்ய மக்கள்ல ஒருவராகவும் வர்றதுபோல இருப்பதால், அவருக்கென அந்த வேஷ்டி சட்டையும், உடல் பெருசா தெரியாத மாதிரியும் இருக்க அந்த பச்சை சட்டையை சரியா அளவெடுத்து தைச்சிருக்காங்க.

உருவ ஒற்றுமையை வெச்சு கத்தி போல திரைக்கதை வெச்சிருந்தாலும் இருக்கலாம். ஏன்னா அடிவாங்குற இந்த விஜய் கேரக்டர்தான் ஏர்போர்ட்லயும் ஒரு ஜம்ப் போட்டு எகிறி வரார். அதுவும் சரியா அந்த metal barricade மேல கால் வச்சு உந்திதான் குதிச்சு வரார். எனவே தேவையில்லாத லாஜிக் மீரல்கள் படத்துல இருக்காதுனு நம்பலாம்.
முதல் தடவையா உடல்மொழில வேற வேற ஆட்களா தன்னை தயார்படுத்தி அதை டீசரில் காட்டி மெர்சலாக்கி இருக்கிறார் விஜய். அதுக்காகவே மெர்சல் ஹிட்டாகும் வாய்ப்பு அதிகம்.
**கட்டுரையாளர் குறிப்பு:**
சர்க்கஸ் மாஸ்டர் சொல்வதைச் செய்யும் விலங்கைப் போல அல்லாமல், ஒவ்வொரு பயிற்சியும் எதற்கென மெனக்கெட்டு படித்து ஃபிட்னஸ் உலகத்துக்குள் நுழைந்த கிருஷ்ணகுமார், தனியார் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ்மீது பற்றுகொண்ட இக்கால இளைஞராக இவர் வடிவமைத்த [திருக்குறள் மீம்](https://www.facebook.com/krishnakrr/media_set?set=a.1561632957182865.1073741835.100000085282825&type=3) மற்றும் [ஆத்திசூடி மீம்](https://www.facebook.com/krishnakrr/media_set?set=a.1677957255550434.1073741837.100000085282825&type=3) ஆகியவை சமூக வலைதளங்களில் பிரபலமானவை.
