நடிகர் சிபிராஜ் கடைசியாக 2017ஆம் ஆண்டில் வெளியான சத்யா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் ரங்கா, மாயோன் ஆகிய படங்களில் சிபிராஜ் நடித்து வருகிறார். ரங்கா படத்தை வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார். மாயோன் படத்தை என்.கிஷோர் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இவ்விரு படங்களும் விரைவில் திரைக்கு வரக் காத்திருக்கின்றன.
இந்நிலையில் மற்றொரு படத்தில் நடிக்கவும் சிபிராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வால்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் அன்பு இயக்கவுள்ளார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்க ஷிரின் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் சிபிராஜ் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் 17ஆம் தேதி முதல் கும்பகோணத்தில் துவங்குகின்றன.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கிரைம் திரில்லர் கதைக்களம் கொண்ட படமாக வால்டரை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு பொருத்தமான வில்லனை படக்குழு தேர்வு செய்துகொண்டிருக்கிறது. சிபிராஜின் தந்தையான சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் திரைப்படம் அக்காலத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வால்டர் படத்தை பிரபு திலக் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ராசமதி கையாளுகிறார்.
**
மேலும் படிக்க
**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**





