ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் செகண்ட் ஹேண்ட் போன் வியாபாரத்தில் பட்டையைக் கிளப்பிவருகிறது. 2015-ல் மட்டும் சுமார் 2மில்லியன் செகண்ட் ஹேண்ட் ஐ-போன்களை அமெரிக்காவில் விற்றுள்ளது. சான்றிதழ்கள் பெற்ற, தரமான ஐபோன்கள் அங்கே விற்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய செல்போன் வியாபாரச் சந்தை உள்ள இந்தியாவிலும் ஐபோன் நிறுவனம் இந்த வியாபாரத்தைத் தொடங்க நினைக்கிறது. ஆனால், ‘இ வேஸ்ட்’ அதிகமாகும் என்ற காரணத்துக்காக மின்னணுப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இதற்கு அனுமதி மறுத்துவருகிறது. ஐபோன் தயாரிப்பு, பழைய பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் புதுப்பித்தல், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி போன்றவற்றை ஊக்குவிக்கும் அமைச்சரகம் செகண்ட் ஹேண்ட் போன் வியாபாரத்தில் கண்டிப்புடன் இருக்கிறது. கடந்தமுறை சுற்றுச்சூழல் அமைச்சரகத்திடம் அனுமதி கேட்டபோதும், மின்னணுப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அனுமதி கொடுக்கவேண்டாம் என்றே பரிந்துரைத்தது. இப்போது மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வணிகம்- இந்தியாவில் ஆப்பிளுக்கு அனுமதி கிடைக்குமா?
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
