அணு ஆயுதங்களை வைத்து மிரட்டி வரும் வடகொரியாவுடனான அமெரிக்காவின் மோதல் போக்கு பெரும் சேதத்திலேயே போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் காரணமாக,ஐ.நா கவுன்சிலும் ,அமெரிக்காவும் வடகொரியா மீது கடந்த 2006-ஆம் ஆண்டு பொருளாதாரத் தடையை விதித்தன.இருப்பினும் வடகொரியா தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை செய்து வருகின்றது.தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து வடகொரியா மீது போர் தொடுக்கப்போவதாக குற்றம் சாட்டி,அமெரிக்காவை அழித்து விடுவோம் என்று எச்சரித்தது.
வடகொரியாவின் இந்த மிரட்டலை சமாளிக்க அமெரிக்கா,’யு.எஸ்.எஸ்.மிசிகன்’ என்ற ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவின் பூசன் துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளது.இதைத் தவிர அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலும் அடுத்த வாரங்களில் தென்கொரியா வர உள்ளது.அக்கப்பலும், நீர்மூழ்கி கப்பலும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இதற்கிடையில்,வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலை தடுக்க, தென்கொரிய கடல் பகுதியில் ஏவுகணை எதிர்ப்புக் கவன் ஒன்றை அமைத்து வருகின்றது அமெரிக்க ராணுவம்.
இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் ஏப்ரல்-27 (நேற்று)வியாழகிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் அணு ஆயுத ஏவுகணைகளை வைத்து அச்சுறுத்திவரும் வட கொரியாவின் மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வட கொரியாவுடனான பிரச்சனைகளை ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலமாகவே தீர்த்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், இது மிகவும் கடினமாக இருக்கும் எனத்தெரிகிறது. எனவே, பெரும் சேதத்துக்கு பின்னரே இதற்கு தீர்வு ஏற்படும் எனத் தோன்றுகிறது.
வட கொரியாவின் [அத்துமீறல்களை](https://minnambalam.com/k/2017/04/27/1493298686) சீன அதிபர் க்சி ஜின்பிங் தட்டிக்கேட்டுவருகின்றார். இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு கான மிகவும் கடினமாக அவர் முயன்று வருகிறார். அவரால் ஏதாவது செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அநேகமாக அது முடியாமல் போகலாம். ஆனால், ஏதாவது செய்ய வேண்டும் என அவர் விரும்புவதாகவே நான் கருதுகிறேன்’ இவ்வாறு டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.�,”