ADVERTISEMENT

லண்டன் டூ சென்னை: சூர்யா 37 அப்டேட்ஸ்!

Published On:

| By Balaji

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் புதிய படத்தின் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளது.

அயன், மாற்றான் ஆகிய படங்களையடுத்து சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் ஒரு புதிய படமானது உருவாகிவருகிறது. இந்த கூட்டணியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங்கைக் கவனிக்கிறார்.

ADVERTISEMENT

சூர்யா-சாயிஷா மட்டுமல்லாமல் இவர்களுடன் மோகன்லால்,ஆர்யா, போமன் இரானி போன்றவர்களும் நடித்துவருவதால் இந்தப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முன்னதாக லண்டனில் நடந்தன.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் (செப்டம்பர் 4) சென்னையில் பிரமாண்ட அரங்குகளில் நடைபெறுகிறது. சென்னை படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக குலுமணாலி மற்றும் டெல்லியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அதையடுத்து வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தப்படத்தில் மட்டுமல்லாது செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்திலும் சூர்யா பிஸியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share