ராவணனாக நடிக்கும் ’கேஜிஎஃப்’ யஷ் !

By Minnambalam

|

Published on 23 Oct 2024, 4:26 PM

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ’ராமாயனா’ திரைப்படத்தில் தான் ராவணனாக நடிக்கவிருப்பதாக கன்னட நடிகர் யஷ் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் நமித் அரோரா உடன் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், ‘ ராமாயணத்தில் வேறு எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எனக்கு நடிக்க பெரிதாக விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை ராவணன் கதாபாத்திரமே ஒரு நடிகனாக எனக்கு சுவாரஸ்யம் தரக் கூடிய கதாபாத்திரம்.

அந்த கதாபாத்திரத்தின் பல்வேறு கோணங்கள், நுணுக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை வித்தியாசமாகப் படைக்க பெரும் வகையில் வாய்ப்புண்டு. அது நிச்சயம் தனித்துவமான ஒரு அணுகுமுறையாக அந்தக் கதாபாத்திரத்திற்கு இருக்கக் கூடும்’ எனப் பேசினார்.

ADVERTISEMENT

மேலும், இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் நமத்துடன் இணைந்து யஷும் தயாரிக்கவுள்ளார். இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட படத்தை அகில உலகப் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கம் எங்கள் இருவருக்கும் இருந்த காரணத்தாலே இது நடக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சிச்சோரே’ , ‘தங்கல்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நிதிஷ் திவாரி இந்த ‘ராமாயனா’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கின்றனர் .

ADVERTISEMENT

யஷ் தற்போது இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்ஸிக்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை நயன் தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– ஷா

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel