‘மோடியுடன் செல்பி கூடாது’ – எம்.பி-க்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Published On:

| By Balaji

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அங்கு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அங்கு நடந்த பார்லிமெண்ட் கூட்டுக்கூட்டத்தில் பயங்கரவாதம் பாதுகாப்பு, பொருளாதார நட்புறவு உள்ளிட்டவை குறித்து 45 நிமிடங்கள் பேசினார். இந்தப் பயணத்தின்போது வழக்கம்போல எம்.பி-க்களுடன் மோடி படம் எடுத்துக்கொள்ளவில்லை. ஏன்?

‘எம்.பி-க்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று குறிப்பிட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் குழு, எம்.பி-க்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தில், இந்திய பிரதமருடன் செல்பி எடுக்கக்கூடாது. ஒரு நாட்டின் தலைவருடன் செல்பி எடுப்பது முறையான செயல் அல்ல. இதற்கு முன்னர் இதுபோன்ற செயல் காரணமாக பல நாட்டு தலைவர்கள் தங்களது நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு சென்றுள்ளனர். ஒரு நாட்டின் தலைவர் தானாக கை நீட்டும் வரை, எம்.பி-க்கள் தாங்களாக கைகுலுக்க முயற்சி செய்யக்கூடாது. பிரதமர் மோடிக்கு பரிசு வழங்க விரும்பினால், அது தோலினால் இருக்கக்கூடாது. அவர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருப்பதால், விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பொருளை வழங்குவது முறையாகாது’ எனக் கூறப்பட்டுள்ளதாக மோடி ஆதரவு இணையதளங்கள் குறிப்பிட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share