மேகதாட்டு: மத்திய அமைச்சரை சந்தித்த எடப்பாடி, குமாரசாமி

Published On:

| By Balaji

நிதி அயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கர்நாடக முதல்வர் குமாரசாமியும் மேகதாட்டு அணை தொடர்பாக மத்திய நீர் வளம் மற்றும் ஆதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு தயாரித்த வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (ஜூன் 15) டெல்லியில் நடைபெறும் நிதி அயோக் கூட்டத்துக்காக அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி சென்றுள்ள நிலையில் தமிழ்நாடு, கர்நாடக முதல்வர்கள் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை தனிதனியே சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, கர்நாடக முதல்வர் குமாரசாமி மேகதாட்டு அணை கட்டுவது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.

அதில், காவிரியின் குறுக்கே எந்த இடத்திலேயும் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், மேகதாட்டு அணை கட்டுவதற்காக தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எந்த விதமான விதிமுறைகளோ, சட்டமோ இல்லை. இந்த அணை கட்ட தமிழகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

கர்நாடக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சரிடம் மேகத்தாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அப்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைகள் குறித்தும், நதிநீர் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share